தனுஷின் அசுரன் படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல்!

மாரி 2 படம் வெளியாகி சிறப்பாக ஓடி வரும் இத்தருணத்தில் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி மறுபடியும் இணைந்து வெளியாகவிருக்கிற படம் அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி s தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மூன்றாம் வாரம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.