தனுஷின் கதாநாயகிக்கு கிரிக்கெட் வீரருடன் காதலா !

நடிகைகள் விளையாட்டு வீரர்களை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் சகஜம். அசாருதீன், விராட்கோலி இவர்கள் வரிசையில் சில நடிகைகளும் கிரிக்கெட் வீரர்களும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவ்வரிசையில் கொடி படத்தில் தனுஷுடன் நடித்த அனுபமா பரமேஸ்வரன் கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக தகவல் வெளியானது. அனுபமா பரமேஸ்வரனும், பும்ராவும் நெருங்கி பழகுவதாகவும், இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. காதல் கிசுகிசு குறித்து இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் அனுபமா தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, எனக்கும் பும்ராவுக்கும் காதல் என்று தகவல்கள் பரவி வருகின்றன. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.