தனுஷின் ‛மாரி-2′ கதை ரெடி

தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் 2015ம் ஆண்டு வெளியான படம் ‛மாரி'.இப்படத்தில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்த சில மாதங்களிலேயே மாரி 2 உருவாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில் மாரி 2 படத்திற்கான கதை ரெடியாகிவிட்டதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛'மாரி-2' படத்தின் முழுக்கதையையும் இயக்குனர் பாலாஜி மோகன் என்னிடம் ஒப்படைத்துவிட்டார்'' என அதிகாரப்பூர்வமாக​  கூறியுள்ளார்.