தனுஷின் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்த ‘அசுரன்’ படத்தின் அப்டேட்!

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் ஒரு தனுஷ் தானாம். படத்தின் பட்ஜெட் எகிறியதால் இன்னொரு தனுஷின் போர்ஷனை நீக்கிவிட்டார்களாம். இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.