தனுஷின் ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி

தனுஷ் நடித்து சமீபத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. செளந்தர்யாரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும், இந்த படத்தின் டீசர் வரும் மே மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் இந்த படத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.முதல் பாகத்தில் நடித்த தனுஷ், அமலாபால் மீண்டும் ஜோடி சேரும் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் கஜோல் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.