தனுஷுக்கு வில்லனாகும் ஹீரோ நடிகர்!

நடிகர் தனுஷ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் குற்றாலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.துரை செந்தில் படத்தில் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி இந்தப் படத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தின் ஹீரோ நவீன் சந்திரா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.