தனுஷுடன் இணைந்திருக்கும் மேலும் ஒரு முக்கிய நடிகர் !

என்னை நோக்கி பாயும் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் பட்டாசு என்ற படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகஉள்ளது. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என்ற படத்தின் படவேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அது முடிந்ததும் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கம் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான நடிகை, நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது. சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிறப்பாக நடித்திருந்த நட்டி நட்ராஜும் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.