தனுஷைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மஞ்சு வாரியார் !

அசுரன் படம் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியார் தமிழில் அறிமுகம் ஆனார். மலையாள படங்களில் நடித்து வரும் அவருக்கு அசுரன் படத்துக்கு பின்னர் தமிழிலும் வாய்ப்புகள் வருகிறது. இதில் பல வாய்ப்புகளை, கதை பிடிக்காததால் அவர் நிராகரித்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு வந்தது. இதில் நடிக்க மஞ்சு வாரியார் சம்மதித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை ஷான் என்ற மலையாள இயக்குனர் இயக்குகிறார். பிஜு மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே 96 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க மஞ்சு வாரியாரைத்தான் தேர்வு செய்தனர். சில காரணங்களால் அதில் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகே அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு சென்றது.