தனுஷ் இயக்கும் பவர்பாண்டி பட​ காட்சியை பார்த்து அசந்துபோன​ செல்வராகவன்

தனுஷ் தற்போது ராஜ்கிரண் நடிப்பில் 'பவர்பாண்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ் இயக்கி வரும் இப்படம் சினிமா ஸ்டண்ட் நடிகர் பற்றிய படமாம். இப்படத்தில் ராஜ்கிரன் ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கிறாராம்.இவருடன் பிரசன்னா, சாயா சிங் உள்பட​ பலர் நடிக்கின்றனர்.

தனுஷ்-அனிருத் பிரிவின் காரணமாக இப்படத்திற்கு ஷான் ரோல்டனுக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கி இருக்கிறார் தனுஷ்.இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் பண்ணி தன்னுடைய அண்ணன் செல்வராகவனுக்கு போட்டு காட்டியுள்ளார் தனுஷ். அந்த காட்சிகளை பார்த்து இயக்குனர் செல்வராகவன் அசந்துபோனாராம். ''பவர் பாண்டி'யின் காட்சிகளை பார்த்து அசந்துபோய் விட்டேன், ரொம்பவும் வேடிக்கையாகவும் மாயாஜாலமாகவும் இருக்கிறது. தனுஷ்,ராஜ்கிரனின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது'' என்று ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.