தனுஷ் எங்கள் மகன்,உரிமை கொண்டாடும் சிவகெங்கை மாவட்டம் கதிரேசன் – மீனாள் தம்பதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் ரஜினியின் முத்த மருமகனாகவும் இருக்கும் நடிகர் தனுஷ்.அவரை தங்களது மகன் என சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.சிவகெங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வசித்து வரும் கதிரேசன் – மீனாள் தம்பதியினர்தான் இந்த பிரச்சனையை கிளப்பியுள்ளனர்.

இந்த தம்பதியினர்களுக்கு பிறந்த கலையரசன் என்ற மகன் பிளஸ் 1 படிக்கும்போது தங்களை விட்டு பிரிந்து சென்னை சென்று தனுஷ் என்ற பெயரில் நடிகராகி உள்ளதாகவும், நடிகரான பின்னர் இதுவரை அவர் தங்களை  பார்க்க வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.

சென்னைக்கு சென்று தனுஷை பார்க்க முயற்சித்தபோது கஸ்தூரிராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருவதாகவும் இதுகுறித்து காவல்நிலையத்திலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.