தனுஷ்-கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்!

சூப்பர் ஹிட் படமாக பேட்ட படத்தைக் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், அடுத்ததாக தனுஷை வைத்து இயக்க உள்ளார். பேட்ட படத்துக்கு முன்பே இப்படத்தை இயக்க திட்டமிடப்பட்ட நிலையில், பேட்ட படம் காரணமாக படத்தின் இயக்கம் தள்ளிப்போனது. ரஜினிக்காக கார்த்திக் சுப்பாராஜும் தனுஷும் இடைவெளிவிட்டனர். இதையடுத்து தற்போது தனுஷ் – கார்த்திக் சுப்பாராஜ் கூட்டணி இணைந்துள்ளது, இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.