தனுஷ் செல்வராகவன் இணையும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை

தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' தற்போது வெளியாகி உள்ளது. 'அசுரன்' படத்தை தொடர்ந்து, தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி படத்தை தயாரிக்க உள்ளார் தாணு. இந்த படத்துக்கான கதையை இறுதி செய்து, லண்டனில் பாடல் பதிவுகளை தொடங்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த படத்துக்கான பாடல்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் சென்னை திரும்பியவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.