தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை!

வாரிசு உரிமை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறிய வழக்கில், நடிகர் தனுஷ் வரும் 13-ம் தேதி பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி, தனுஷ் தங்களின் மகன் என்று தாக்கல் செய்த மனுமீது கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், தமது பிறப்பு மற்றும் கல்வி குறித்து தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று குறிப்பிட்டு, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர். மனுவை  விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா, இதுகுறித்து நடிகர் தனுஷ் மற்றும் மதுரை மாநகர் கோ.புதூர் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 13.ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.