Cine Bits
தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் படமான “An Extraordinary Journey of the Fakir” படத்தின் கதை இதோ!

தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான “An Extraordinary Journey of the Fakir” நடித்து வருகின்றார். இப்படத்தை கனடா இயக்குனர் 'கேன் ஸ்காட்' இயக்கி வருகின்றார். இப்படம் 'An Extraordinary Journey of the Fakir' என்ற நாவலின் அடிப்படையாக கொண்டு தான் எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தில் அஜா என்ற இந்திய மேஜிக் நிபுணர் வறுமையால் மிகவும் கஷ்டப்படுகின்றார். இதில் அஜாவாக தனுஷ் நடிக்கின்றார். ஒரு கட்டத்தில் இவரின் அம்மாவின் கட்டளைக்காக அஜா பாரீஸ் செல்லவேண்டியுள்ளது, அங்கு ஒரு டாக்ஸி ட்ரைவரிடம் ஏற்படும் மோதலாம் அவர் ஒரு பீரோவில் ஒழிந்துக்கொள்கின்றார். அந்த பீரோ ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு செல்ல, அங்கு அஜா சந்திக்கும் மனிதர்கள், அவரின் பயணம் என்ன ஆகின்றது என்பதே இப்படத்தின் கதையாம்.