தனுஷ், நயன்தாரா வழியில் அமலா பால் !

அமலா பால் தனுஷ், நயன்தாரா வழியில் செல்ல முடிவு செய்துள்ளார். ஹீரோக்களை காதலித்து டூயட் பாடி வந்த அமலா பால் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். உமாததன் எழுதிய ஒரு போலீஸ் சர்ஜன்டே ஓர்மகுறிப்புகள் புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் மலையாள படமான கேடவரில் அமலா பால் நடிக்கிறார். அபிலாஷ் பிள்ளை இயக்கும் இந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் அவர். இது தான் அமலா பால் தயாரிக்கும் முதல் படம் ஆகும். அமலா பால் நயன்தாரா வழியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்யவில்லை அவரை போன்றே படங்களை தயாரிக்கவும் செய்கிறார். கேடவர் படத்தின் நிலையை பாரத்துவிட்டு அமலா தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம்.