Cine Bits
தன்னுடைய படங்கள் நின்று பேசவேண்டும் !
தியாகராஜா குமாரராஜா படங்கள் அடுத்தடுத்து எடுக்க வேண்டும் என்று யோசிப்பவர் இல்லை. ஒரு படம் எடுத்தாலும் அது நீண்ட வருடங்கள் நின்று பேச வேண்டும் என்ற எண்ணத்திலேயே படங்கள் இயக்குகிறார். சூப்பர் டீலக்ஸ் இவரது இயக்கத்தில் புதிதாக வந்த படம், விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தில் போர்ன் ஸ்டார் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார், ஆனால் இவருக்கு பதிலாக முதலில் நடிகை நதியா தான் நடிக்க இருந்தாராம், பின் சில காரணங்களால் அவர் வெளியேற ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.