தன்னுடைய 9 மாத உழைப்புதான் இந்த பிரஸ்ட் லுக் – அருண் விஜய் !

தடம் படத்தைத் தொடர்ந்து மூடர் கூடம் இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள், பிரபாஸ் உடன் சாஹோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் அருண்விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸர் படத்தின் கதாபாத்திரத்துக்காக மலேசியா மற்றும், வியட்நாமில் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வந்தார் அருண் விஜய். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டார். அதில் அருண் விஜய்யின் உடலமைப்பு பலரையும் கவர்ந்தது. இதுபற்றி அருண் விஜய், நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது எனது 9 மாத கடின உழைப்பு. இது ஒரு சாதாரண படம் அல்ல. அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டிய படம். கதைக்களம் அந்த மாதிரி. என்னுடைய 100 சதவிகித உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி” என்று அருண் விஜய் கூறியுள்ளார்.