Cine Bits
தன்னைவிட பிரபாஸுக்கு இந்த கதை சரியாகயிருக்கும் – யாஷ்ஷின் பெருந்தன்மை !
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்திற்கு பிறகு மிகப்பெரிய நடிகராகி விட்டார் யஷ். அந்த படத்தைப் பார்த்த யஷிற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்களில் தெலுங்கு நடிகர் பிரபாசும் ஒருவர். இவரும், யஷூம் நெருக்கமான நண்பர்களும்கூட. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகிவரும் நிலையில், சமீபத்தில் கன்னட டைரக்டர் ஒருவரிடம் கதை கேட்டிருக்கிறார் யஷ். ஆனால் அந்த கதையை தன்னைவிட பிரபாஸுக்கே பொருத்தமாக இருக்கும் என்று கருதிய அவர், அந்த டைரக்டரிடம் இந்த கதையை பிரபாசிடம் போய் சொல்லுங்கள் என்று அந்த இயக்குனரை பிரபாசிடம் அனுப்பி வைத்துள்ளார் யஷ்.