தன் பிறந்தநாள் விழாவில் தனுஷுக்கு கேக் ஊட்டிய சிம்பு!

முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் இருதுருவங்களாக பிரிந்து அடிக்கடி நெட்டில் மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் நட்பு ரீதியாகவே பழகி வருகின்றார்கள். சிம்பு, தனுஷ் இடையே மோதல் இருப்பதாக முன்பு ஒருமுறை சர்ச்சை எழுந்தபோது இருவரும் ஒன்றாக மேடையில் தோன்றி தங்களின் அன்பை வெளிப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். மீண்டும் அப்படியொரு சர்ச்சையை சிலர் எழுப்பி வரும் நிலையில் அதற்கு பதில் அளிப்பதுபோல் இருவரும் இணைந்திருக்கின்றனர். சிம்பு நேற்று தனது பிறந்தநாள் கொண்டாடினார். அதில் தனுஷ் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாள் கேக் வெட்டி தனுஷுக்கு சிம்பு ஊட்டிவிட்டார். யுவன் சங்கர் ராஜா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.