தப்புசெஞ்சவங்கள நிக்கவச்சு சுடுங்க – நடிகை விஜயலட்சுமி ஆவேசம்!

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த கும்பல் செய்தியை கேட்டு உலகத் தமிழர்கள் நடுநடுங்கி போயுள்ளனர். இவர்களை என்னதான் செய்யலாம் என்று அவரவர் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். அவ்வகையில் பிக் பாஸ் புகழ் நடிகை விஜயலக்ஷ்மி தன் கருத்தை ட்விட்டரில் பதித்திருந்தார் அதில் யோசிக்க வேணாம், நிக்க வச்சு சுடுங்க, லைவ் டெலிகாஸ்டுல.. பயம் வரட்டும். பணபலம், அதிகாரம், வயசு, குரூர மனச்சுனு இந்த காம்பினேஷன்ல காலைத் தூக்கி காட்டற பயத்துல பொத்திகிட்டு பொழப்ப பாக்கணும்.. உயிர் பயம் வந்தாதான் உருப்படுவான்ங்க போட்ருங்க சார் உடனே என்று ஆவேசமாக கூறியுள்ளார் விஜயலட்சுமி.