தமன்னாவின் புதிய முயற்சிக்கு தடைபோடும் இயக்குனர்கள்!

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. அதன்பிறகு பல படங்களில் கவர்ச்சியாக நடித்த தமன்னா, குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார்.இந்நிலையில், பாகுபலி படத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு புரட்சி பெண் வேடத்தில் நடித்த தமன்னா, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிரடியான கதைகளில் நடித்து விட வேண்டும் என்று சில டைரக்டர்களிடம் படவாய்ப்பு கேட்டுள்ளார்.

ஆனால், அப்படி அவர் சந்தித்த டைரக்டர்கள், தமன்னா என்றாலே ரசிகர்கள் கவர்ச்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் அந்த கோணத்தில்தான் தமன்னாவை யோசித்து வருகிறோம். பாகுபலி படத்தில்கூட புரட்சி தமன்னாவை விட, கவர்ச்சி தமன்னாவைத்தான் ரசிகர்கள் ரசித்தனர் என்று சொல்லி தமன்னாவின் மாற்று முயற்சிக்கு மறுப்பு கூறியுள்ளனர்.