தமன்னாவின் ரூ.16 கோடி வீட்டின் தனிச்சிறப்பு !

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை தமன்னா.  மும்பையைச் சேர்ந்த இவர் அந்தேரியிலுள்ள உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தற்போது மும்பை வெர்சோவாவில் புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். 22 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், 14-ஆவது தளத்தில் இவருடைய இந்த வீடு அமைந்துள்ளது.  இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை, ரூ. 80 ஆயிரத்து 778 ஆகும். இது அந்த பகுதியில் உள்ள மார்க்கெட் விலையை விட இரண்டு மடங்கு அதிகம். தமன்னா வாங்கிய உள்ள வீட்டின் மொத்த அளவு 2055 சதுர அடி ஆகும். இந்த பிளாட்டின் எந்த பகுதியில்  இருந்து பார்த்தாலும் கடல் தெரியும் என்பது இந்த வீட்டில் தனி சிறப்பு. மேலும் இரண்டு கார் பார்க்கிங் இடங்களும் தமன்னாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.