தமிழக அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை !

எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம்
தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும். யாரை நம்பி மாற்றம் தேடுவது. சாதாரண வாக்காளனாய் எனக்குத் தோன்றியது.மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுவதாக சேரன் வேதனை தெரிவித்துள்ளார். மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சித் தலைவர்கள்கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களைக் கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள், தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள் தானே இவ்வாறு சேரன் தனது வேதனையை பதிவிட்டுள்ளார்.