தமிழில் அடியெடுத்துவைக்கும் தெலுங்கு முன்னணி நடிகை சித்ரா சுக்லா

சசிகுமார் நடித்து வரும் படங்களில் ஒன்று 'நாநா'. இந்த படத்தை இயக்குனர் நிர்மல் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'நாநா' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க சித்ரா சுக்லா என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நா.நாராயணன் என்ற கேரக்டரில் சசிகுமார் நடித்து வருவதாகவும், மும்பை போலீஸ் கேரக்டரில் சரத்குமார் நடித்து வருவதாகவும், நாயகி சித்ரா சுக்லா ஒரு டான்சர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.