தமிழில் உபன் படேல்!!!

உபன் படேல் மாடலாக இருந்து நடிகர் ஆனவர். இவர் பிக் பாஸ் சீசன் 8 மூலம் பெரும் புகழை அடைந்தார்.  தற்போது ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் மூலம் தயாரித்து இயக்கும்  பூமாராங்  படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த படத்தில் அதர்வா ஹீரோவாகவும், மேகா  ஆகாஷ் ஹீரோயினாகவும், நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சுஹாசினி  மணிரத்னம்  நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.ஜே.பாலாஜி ,சதிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.இதில் பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவும்,ராதன் இசையமைப்பாளராகவும் உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று  துவங்கியது.