தமிழில் ஜுமான்ஜி பாணியில் சூப்பர் நேச்சுரல் படம் பஞ்சாட்சரம் !

சூப்பர் நேச்சுரல் மற்றும் ஹாரர் வகை படங்களுக்கு ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் எடுக்கப்படும் படம் பஞ்சாட்சரம். படத்தின் தலைப்பு குறிப்பிடுவது நீர், நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது. இந்த குணாதிசயங்களை கொண்ட 5 நபர்கள், அறிமுகமாவதும் அவர்களுக்குள் நல்ல பிணைப்பை ஏற்படுத்துகின்றது. அவர்கள் ஒன்றாக ஒரு பயணத்தை திட்டமிடும்போது, ஒரு புத்தகத்திலிருந்து ஒரு விளையாட்டை கதாநாயகி பரிந்துரைக்கும்போது அதுவரை நடக்கும் விஷயங்கள் நன்றாக நடக்கும். நடைமுறைக்கு மாறாக மற்றும் தற்செயலாக மாறும்பொழுது அனைவரும் நம்பமுடியாத அதிர்ச்சியளிக்க கூடிய விஷயங்கள் நடக்கிறது. இப்படம் ஒரு உளவியல் நேச்சுரல் சாகச திரில்லர் படமாக உருவாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 27 முதல் தொடங்கவுள்ளது. அறிமுக இயக்குனர் பாலாஜி வைரமுத்து படத்தை இயக்கவுள்ளார். சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின், மது ஷாலினி உள்பட பலரும் நடித்துஉள்ளார்.