தமிழில் தயாரிப்பாளராகும் ராணா டகுபதி !

நானி நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இப்படம் தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இதில், விஷ்ணு விஷால் நானி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் தெலுங்கு நடிகரான ராணா டகுபதி, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ஜெர்ஸி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ராணா பெற்றிருக்கிறார். அவரது பேனரில் உருவாகவிருக்கும் இப்படத்தில், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடித்த 'ஜீவா' படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் இவர் நடிக்கிறார். மேலும், தெலுங்கில் சில படங்களைத் தயாரித்து வரும் ராணா டகுபதி, முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.