தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் !

தமிழில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா. முழுக்க ஹாரர் காமெடி வகையில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதனை ஹரி – ஹரிஷ் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்தப் படத்துக்கு முன்பாக 'அம்புலி', 'ஜம்புலிங்கம்' உள்ளிட்ட படங்களை ஹரி – ஹரிஷ் கூட்டணி இயக்கியுள்ளது. இதில் வில்லனாக நடிக்க இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. முன்னதாக இந்தியில் 'அக்‌ஷர் 2', மலையாளத்தில் 'டீம் 5' உள்ளிட்ட படங்களில் ஸ்ரீசாந்த் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.