Cine Bits
தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம் !

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’. கென் ஸ்காட் இயக்கி உள்ளார். இந்த படம் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரானது. திரைப்பட விழாக்களில் திரையிட்டு விருதுகளையும் பெற்றது. இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக தயாராகி உள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் இந்தியா முழுவதும் படத்தை திரையிட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தின் ‘வாழ்க்கையை தேடி நானும்’ என்ற தலைப்பை ‘பக்கிரி’ என்று மாற்றி உள்ளனர்.