தமிழுக்கு ரீ எண்ட்ரியாகும் பூமிகா !

நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் பூமிகா. அதன் பிறகு அவர் நடித்த ‘ரோஜா கூட்டம்’ படமும் சூப்பர் ஹிட்டானது. ’ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் முதல் பாதியில் பவ்யமாகவும், இரண்டாம் பாதியில் அதிரடியாகவும் வித்தியாசம் காட்டியிருப்பார். நிறைய தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் திருமணத்திற்குப் பிறகு, தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குநர் மு.மாறனின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூமிகா. தவிர, நயன்தாரா நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்திலும் பூமிகா நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.