Cine Bits
தமிழுக்கு வரும் சாய்குமார் மகன் ஆதி !
வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் சாய்குமார் அடுத்து தனது வாரிசாக மகன் ஆதியை திரையுலகுக்கு அழைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் ஆதி கதாநாயகனாகவும் வேதிகா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். தெலுங்கு திரையுலகில் தனது திறமையை ஏற்கனவே ஆதி நிரூபித்து இருக்கிறார். தற்போது அவர் தமிழ் பட உலகில் முதன் முதலாக கால்பதிக்கிறார். இப்படத்தை காவ்யா மகேஷ், சி.வி.குமார், மற்றும் நியூ ஏஜ் சினிமா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இரட்டை இயக்குனர்களான கார்த்திக்-விக்னேஷ் சகோதரர்கள் டைரக்டு செய்கிறார்கள்.