தமிழுக்கு வரும் மற்றுமொரு கேரளத்து பெண்குட்டி

மலையாள சினிமாவில் அண்மையில் வெளியான படம் தண்ணீர் மாதன் தினங்கள். இப்படத்தின் பட்ஜெட் வெறும் ரூ 2 கோடி தான். ஆனால் வசூல் ரூ 45 கோடிக்கும் மேல். இப்படத்தில் நடித்த ஜோடி புதுமுகங்களே. இதில் ஹீரோயினாக நடித்தவர் அனஸ்வரா. முதல் படத்தின் மூலமே பிரபலமாகிவிட்டார். தற்போது அவர் ராங்கி படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறாராம். திரில்லர் படமான இதில் திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு மருமகளாக அனஸ்வரா நடிக்கிறாராம். இப்படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்க, ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ளார். அனஸ்வரா ஏற்கனவே தமிழில் அமலா பால் நடிப்பில் வந்த அம்மா கணக்கு படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனஸ்வராவுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாகியுள்ளது. அவருக்கு படவாய்ப்புகளும் தேடி வர தொடங்கிவிட்டது.