தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் ஏன் !

சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. எனவே போரடித்ததால் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே நான் பிசியானதும் உண்மைதான். இந்தி, மலையாள படங்களில் நடிக்கவும் தயார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை இயல்பாக காட்டுவார்கள். தெலுங்கில் சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலும் அழகாக காட்டுகிறார்கள். ஆனாலும் தமிழில் நான் நடித்த குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் தான் எனக்கு பேர் வாங்கி கொடுத்தன. நல்ல கதைகள் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார்.