தமிழ் திரையுலகில் மீண்டும் பிரணிதா சுபாஷ்

பிரணிதா சுபாஷ்  தென்னிந்தியா மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்  சகுனி படத்தில் நடித்த போது, அப்போது கோலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகையர் எல்லாம், சற்று கலக்கம் அடைந்தது உண்மை தான். ஆனால், அந்த படம் தோல்வியை சந்தித்ததால். வாய்த்த அடிமைகள் என்ற காமெடி படத்தில், ஜெய்க்கு ஜோடியாக களமிறங்கி உள்ளார். இந்த படத்துக்கு பின், தமிழ் திரையுலகில் தனக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரணிதா.