தமிழ் நடிகையென்பதற்காகவே கன்னடர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் – நடிகை விஜயலக்ஷ்மி பரபரப்பு பேட்டி !

ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து ‘கலகலப்பு, ‘ராமச்சந்திரா, ‘மில்டரி, ‘எஸ் மேடம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் ‘மீசையை முறுக்கு. இப்படத்தில் காமெடி நடிகர் விவேக்கிற்கு மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா வாய்ப்பு தேடி பெங்களூர் வந்த நான் இந்த ஊரில் அதிகமாகவே சிரமத்திற்கு உள்ளாகின்றேன். எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன். முதலில் இங்கிருந்து நான் வெளியேற வேண்டும். இங்கு நான் வாங்கிய ரூ.1 லட்சம் கடனை அடைக்க வேண்டும். இதற்காக தமிழ் சினிமா பிரபலங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். சினிமா நடிகர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறையினர் என்று பலரும் என்னை ஒரு தமிழ் பெண் என்ற காரணத்தினால், தொடர்ந்து சிரமப்படுத்துகின்றனர் என்னைப் போன்று நிறைய தமிழர்கள் இங்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், அது வெளியில் தெரிவதில்லை என்று அவர் கண்ணீருடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.