தமிழ் பட வில்லன் நடிகர் கைது – Me Too புகாரில் கைது !

தமிழில் விஷால் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன். சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிகமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விநாயகன் பா.ஜனதாவுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் விநாயகன் மீது கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி மீ டூவில் பாலியல் குற்றச்சாட்டு சொன்னார். அவர் கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக விநாயகனை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை மட்டுமின்றி எனது தாயும் அவர் விருப்பத்துக்கு ஏற்ப ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பாலியல் ரீதியாக வற்புறுத்தினார் என்றார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்குப்பதிவு விநாயகனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.