தமிழ் மக்களுக்கு பாகுபலி டீம் கொடுத்த சோகமான செய்தி

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாக வரவுள்ள பிரம்மாண்ட  திரைப்படம் `பாகுபலி 2'. வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியாகும் என்று பாகுபலி படக்குழு அறிவித்திருந்தது. தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) வீடியோ வடிவில் வெளியாவது இதுவே முதல்முறை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஐ-மேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்குப்பதிலாக தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டத்தை ஐமேக்ஸ் பார்க்க நினைத்த பாகுபலி தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் உள்ளனர்.