தமிழ், மலையாளம் படங்களில் மாறி மாறி நடித்துவரும் மியா ஜார்ஜ் !

மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். நல்ல அழகான தோற்றம் இருந்தும் தமிழ் படங்களில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை, எனினும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும் இவர், தற்போது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மலையாளத்தில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான சலாம் காஷ்மீர் என்கிற படத்தில் காளிதாஸின் தந்தை ஜெயராமுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.