தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தபடி இருப்பேன் : ஷாருக்கான் சிறப்பு பேட்டி

நீண்ட இடைவெளிக்கு பிறகு எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஷாருக்கானின் படமாக ‘ஜீரோ’ இருக்குமா என்று சிலர் கேட்கிறார்கள். நான் எப்போதுமே எல்லா தரப்பினருக்குமான ஹீரோதான். குறிப்பிட்ட ரசிகர்களுக்காக மட்டும் என்று நினைத்து படம் செய்தது கிடையாது’ என்று, ஒரு கையில் சிகரெட் புகைத்தபடி, மறுபுறம் நமது கேள்விகளை எதிர்கொண்டு பதில் சொல்கிறார் ஷாருக்கான். மும்பையில் சந்தித்தபோது, படங்களை குறைத்துக் கொண்டே வருவது பற்றியும், ஜீரோவில் முதல்முறையாக புது கெட்டப்புக்கு மாறியிருப்பது பற்றியும், தமிழ் ரசிகர்கள் குறித்தும், தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பேசினார், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.