தயாரிப்பாளராகும் எண்ணத்தை கைவிட்ட காஜல் அகர்வால் !

தற்பொழுது இந்தியன் -2 ல்  கமலுக்கு ஜோடியாக வயதான தோற்றத்தில் நடித்துவருகிறார். சில மாதங்களுக்கு முன் 'கா' பிலிம்ஸ் என்ற தன் சொந்த படத்தயாரிப்பு கம்பெனி மூலம் சினிமா தயாரிப்பில் இறங்கப்போவதாக காஜல் அறிவித்தார். பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் 'ஆவ்' என்ற தெலுங்கு படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் பட தயாரிப்பில் தற்பொழுது ஈடுபடப்போவதில்லை என காஜல் அறிவித்துவிட்டாராம். தன்னால் தயாரிப்பு நிறுவனத்தை சரியாக நிர்வகிக்கமுடியுமா என்ற சந்தேகம் எழுந்ததே இம்முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.