தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார் காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், முதன்முறையாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார்.தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், முதன்முறையாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘அவ்’. இதில் காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து காஜல், பிரசாந்த் மீண்டும் இணைந்து பெயரிடப்படாத புதிய படத்தில் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக காஜல் இணைந்துள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.