தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் சமந்தா

கன்னட மொழியில் வெளியான திரில்லர் திரைப்படமான யு-டர்ன் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படத்தை பார்த்த சமந்தா இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.யு-டர்ன் பட இயக்குனர் பவன் குமாரை தனது காதலர் நாகசைதன்யாவுடன் சந்தித்த சமந்தா அப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை இயக்கும்படி கேட்டுள்ளார் அதுமட்டுமள்ளாது தானே அப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் இயக்குனர் பவன் குமார்.இந்நிலையில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் தானே நடிக்க​ உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளயது.தற்போது தமிழில் இருப்புதிரை படத்தில் நடிப்பது குறிப் பிடத்தக்கது.