Cine Bits
தயாரிப்பில் இறங்குகிறார் பாலாஜி மோகன் !

‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி, மாரி 2’ ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் பாலாஜி மோகன். இதன் மூலம் தயாரிக்கும் முதல் படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக பாலாஜி மோகன் கூறியிருக்கிறார்.