தரமான படம் வெள்ளைப் பூக்கள் – விவேக் !

வெள்ளைப் பூக்கள் ஒரு தரமான படம். மகேந்திரனின் உதிரிப்பூக்கள் எப்படி டிரெண்ட் செட்டராக அமைந்ததோ, அதேபோல் தான் வெள்ளைப் பூக்களும் டிரெண்ட் செட்டராக அமையும். இந்த படத்தின் இயக்குனர் விவேக் இளங்கோவனுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நான் காமெடியனாக நடித்த பல படங்கள் பெரிய ஹிட்டாகி இருக்கின்றன. எனது காமெடிக்காகவே ஓடியிருக்கின்றன. ஆனால் ஹீரோவாக நடித்த படங்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்தன. அதை நான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக நின்று என்னை நடிக்க வைத்தனர். இந்த படத்தில் அது போன்ற பிரச்சினைகள் வராது என படக்குழுவினர் நம்பிக்கை அளித்துள்ளனர். வெள்ளைப் பூக்கள் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டல் நகரில் தான் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் ஒரு குற்றச்செயலில் நான் என்னை தானாக புகுத்திக்கொண்டு செயல்படுவேன். இதுதான் படத்தின் கதை, படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், என விவேக் கூறினார்.