தர்பாரில் இணைந்துள்ள பாலிவுட் பிரபலம் !

இந்தி நடிகர் சுனில் ஷெட்டி தர்பார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் 12 பி படத்தில் நடித்திருந்தார் சுனில் ஷெட்டி. அந்த படத்துக்கு பிறகு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக அவர் நடித்துள்ளார். இந்தி படங்களில் ஹீரோவாக நடித்திருந்த சுனில் ஷெட்டி, தெலுங்கிலும் சில படங்களில் வில்லனா நடித்தார். இந்நிலையில் தமிழிலும் அவர் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் அதில் நடிக்க தயார் என்றும் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.