தர்பார் அப்டேட் : தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் வெளிவரவிருக்கிறது !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தர்பார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தர்பார் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். அனிருத்தின் இந்த திடீர் அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.