தர்ஷன் தான் அழகுயென்றால் அவரது தங்கை அழகோ அழகு !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் பரிட்சயமாக இருந்தாலும் ஒரு சில போட்டியாளர்கள் நமக்கு யாரென்று தெரியாத புதிய முகங்களாக இருக்கிறது. அந்த வகையில் புதிய சீசனில் 3 வெளிநாட்டை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் தர்ஷன் தியாகராஜா, லாஸ்லியா ,முகுன் ராவ் என்று மூன்று பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் தர்ஷன் தியாகராஜன், இலங்கையை சேர்ந்த மாடலாவார். பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள தர்ஷன் தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வேறென்ன வேண்டும்’ ஆம் படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர், போத்திஸ், நண்டு பிராண்ட் லுங்கீஸ் என்று பல்வேறு விளம்பரத்திலும் நடித்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களில் சண்டியை அடுத்து ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருவது தர்ஷன் தான். அதிலும் கடந்த சில நாட்களாக பிக் அதிலும் வீட்டில் அட்ராசிட்டி செய்து வரும் வனிதாவை கேள்வி கேட்டு வருகிறார் தர்ஷன். தர்ஷன் தனது குடும்பத்தை பற்றியும் தனது பெற்றோர்களை பற்றியும் பேசி இருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது இவரது சகோதரர் பற்றி நெகிழ்ச்சியில் பேசியிருந்தார் .ஆனால், இவரது தங்கை குறித்து சொல்லவே இல்லை. ஆம் தர்ஷனுக்கு ஒரு அழகான தங்கையும் இருக்கிறார், அவருடைய பெயர் துஷாரா தியாகராஜா.