தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் ப்ரியாமணி ?

2007 ம் வருடம் வெளிவந்த பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ப்ரியாமணி. நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் சசிகளவாக நடிக்க ப்ரியாமணி தேர்வாகியுள்ளாதாக தெரிகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் மற்றும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் ஸ்வாமியும் நடிக்கிறார்கள். அவர்களுடன் தேசிய விருது நடிகையான ப்ரியாமணியும் சேர்வதாக இருந்தால் இப்படத்தின் நட்சத்திர அந்தஸ்து மேலும் உயரலாமென திரையுலகம் நம்புகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகுமென தெரிகிறது.