தல அஜித்தோடு அடுத்தப்படம்?- வெங்கட் பிரபு விளக்கம்!

வெங்கட்பிரபு சென்னை 28 எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் சரோஜா, கோவா எனத் தனது நண்பர்களை வைத்து நடிகர் பட்டாளத்தை இயக்கி தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்து அதில் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்தான் மங்காத்தா. ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் ஜானர்களில் ஒன்றான  பாய்ஸ்  ஒன்லி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பைக் கண்டு ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.அதுவரை அஜித் படங்கள் எட்டிய கமர்ஷியல் வெற்றிகளை எல்லாம் உடைத்து வசூலில் புது சாதனைப் படைத்தது மங்காத்தா. எல்லோருக்கும் மங்காத்தா 2 எப்போது வரும் என்ற கேள்வி இருக்கும்… எனக்கும் அந்த ஆசை உண்டு… அந்தப் படத்தை மீண்டும் பண்ணலாமா ? அல்லது வேண்டாமா ? என்ற பயம் எனக்கு இருக்கிறது… ஆனால் அஜித்துடன் கண்டிப்பாக மீண்டும் இன்னொருப் படம் பண்ணுவேன்’ எனக் கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.