தல தளபதி பற்றி ஒரே வார்த்தையில் கூறிய ஷாருகான் !

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் வெளியாகும் தமிழ் படங்களை தவறாமல் பார்க்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் நெருக்கமான நட்பும் வைத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவதை ஷாருக்கான் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது ரசிகர்களுடன் அவர் உரையாடியபோது அதில் சில தமிழ் ரசிகர்களும் இணைந்து கேள்விகள் எழுப்பினார்கள். விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு அற்புதமானவர் என்றார். அஜித்குமார் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு எனது நண்பர் என்று பதில் அளித்தார். இதுபோல் தனுஷ் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று இன்னொரு ரசிகர் கேள்வி எழுப்ப-அதற்கு நான் நேசிக்கும் நபர் என்றார்.